Wednesday, September 10, 2008

முதற்சம்பளம்


மூன்றுவருடங்கள் முயன்றதன்
பயனாக...
வேலை நியமனம்....
கடிதம் கிடைத்தது...
அம்மாவின் சந்தோசம்...
அம்மன் படத்தருகே...
ஆசீர்வாதம் வாங்கும் போதே தெரிந்தது...
அக்கா எனக்கு என்ன வேண்டித்தருவாய்?
கழுத்தைக்கட்டிக் கொண்ட தம்பியின் கேள்வி இது...
எனக்கு சப்பாத்து...
அப்புறம் ஒரு சட்டை...
சம்மதமாய்... தலையாட்டிட துள்ளியோடும் தங்கை...
வேலைக்குப் போக தொடங்கவேயில்லை...
சம்பளத்தை என்ன செய்யலாம்...
மட்டும் கணக்குப் போட்டாயிற்று...
தம்பிக்கும் தங்கைக்கும் விரும்பியதெல்லாம்
வேண்டவேணும்...
அம்மாவிற்கு அழகாய்..ஒரு
 சாறி...
அப்புறம் அப்பாவிற்கு...
சேட்டும்....
உற்சாகத்தில் உறக்கமே வரவில்லை...
வேலையும் ஆரம்பம்...
களைப்பும் இல்லை ...
க டினமும் தெரியவில்லை...
ஆறாம் நாள் நடந்தது.. திருமணப் பேச்சு
பதினைந்தாம் நாள்.. திருமணமும் நடந்தாயிற்று...

வேலையும் கிடைத்தாயிற்று...
திருமணமும் நடந்தாயிற்று...
அவள் அதிஷ்ரசாலி
எல்லோரும் இப்படித்தான் சொன்னார்கள்...

ஒருமாதம் ஓடிவிட கையில் சம்பளம்..
கணவன் கையில் கனத்தது மனது...
கண்களில் கண்ணீர்...
தம்பியின் ஆசை...
தங்கையின் ஏக்கம்...
கன்னத்தில் வழிந்தது...
அம்மா அப்பா பரவாயில்லை...
ஏமாற்றங்கள் பழக்கப்பட்டிருக்கும்...
தம்பி..தங்கை..
அக்கா ஏமாற்றிவிட்டாள் ...நினைப்பார்களா
இல்லை என்னைப் புரிந்து கொள்வார்களா....

2 comments:

su.sivaa said...

நான் அதிகமாய் உணர்ச்சிவசப் படுவதாய் என் மனைவி அடிக்கடி சொல்வாள். இந்தக் கவிதையை படித்தபோது அதை நான் முழுமையாய் உணர்ந்தேன். என்னையும் அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது. எளிமையான வார்த்தையால் உயிரின் வலியை உணர்த்தும் வடிவம் எனக்குள்ளும் வலியைத் தந்தது. நானும் தவறி இருப்பேனோ என்று மனைவியை பயத்தோடு பார்க்கிறேன். அழகான கவிதை

vetha (kovaikkavi) said...

vaalthukal sis. happy new year 2012
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordoress.com

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..