Thursday, September 17, 2009

முடியுமா உங்களால்....

நேற்றுப் போல் இருக்கின்றன நினைவுகள் எல்லாம்....
ஊர்விட்டு ஒடிவந்து.....
உணர்விழந்து....என்
உயிர்மடடும் காத்து....
ஏன் வந்தேன்....
துப்பாக்கி சத்தங்களும்...
நின்றுபோய்விட்டாலும்..என் நினைவில்...
கேட்டபடியேதான்...
பொழுது புலராது ஒருகாலை நேரம்...
துரத்திவந்த துப்பாக்கி குண்டுகளில்...மாண்டுபோன
என்அம்மாவும...
மாமாவும்....
மறுநாள்...ஆட்லறியில்...
துடிதுடித்து செத்துப்போன...என்
அப்பாவும் தங்கையும்....
அள்ளி எடுத்து அழவும் முடியவில்லை...
செத்த வீடுகள் எல்லாம்...
மறுபடியும்...
மறுபடியும்...
சாவீடுகளாகத்தான்....
எல்லாம் நேற்றுப் போல்...
இருக்கின்றன....பாதைதறந்தாலும்
பயணம் மாறினாலும்....
ஊருக்கு போனாலும்...
உதவிகள்தான் நீர் தந்தாலும்...
அநியாயமாய் நீர் அழித்த ...
என் அம்மாவை...
என் அப்பாவை...
என்உடன் பிறப்புகளை....
திருப்பித்தர முடியுமா உங்களால்...
ஊர்விட்டு வந்தேன்அகதியாய் தான்...
ஊர் போகின்றேன்...அநாதையுமாய்....

9 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous said...

super tharshi
eppidi ummala maddum mudijuthu

see said...

நீ எழுதியது கவிதையல்ல
எம் நியம்
நீ கொட்டியது உணர்வல்ல
நாம் கடந்து வந்த பாதை
உனக்குள் இருக்கும் அத்தனையையும்
கொட்டிவிடு
எமது வலிகளின் பதிவுகளாவது
மிஞ்சட்டும்

see said...

நீ எழுதியது கவிதையல்ல
எம் நியம்
நீ கொட்டியது உணர்வல்ல
நாம் கடந்து வந்த பாதை
உனக்குள் இருக்கும் அத்தனையையும்
கொட்டிவிடு
எமது வலிகளின் பதிவுகளாவது
மிஞ்சட்டும்...

சுவடுகள்... said...

இது வெறுமனே கவிதையாமட்டும் இருக்க வேண்டும் என் இறைவனை வேண்டுகிறேன். ஏன் அக்கா இப்பிடி எழுதுறீங்கள். உங்கள் எல்லா கவியுமே ஏதாவது இப்படிதான் இருக்கு. வாசிக்க முடியாமல் இருக்கு.

kavithaikal - suthan said...

very touching

Anonymous said...

very touching

velgnani said...

very nice tharshi keep it up.

velgnani said...

super

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..