Thursday, September 10, 2009

என் கவி

கனவு ஒன்று கண்டு அது கலைந்து
விழித்திருக்கையிலே...
கவியொன்று உள்ளமதில் கருக்கொள்ளும்...
கருக்கொண்ட கவிதன்னை காகிதத்தில் வடிப்பதற்கு...
எனதுள்ளம் துடிக்கும்...ஆனாலும்
தூக்கம் கண்ணைத் தழுவும்....
விடியும்...
வேலை...
விளையாட்டு ...
வீண் அரட்டை என்று...
நேரம் பறக்கும்....இப்படியே....
இப்படியே...
கருக்கொண்ட என் கவியெல்லாம்...
கர்ப்பத்திலே கலைந்து விடும்...

2 comments:

வைகறை நிலா said...

கவிதை அற்புதமாக இருக்கிறது..
எப்போதெல்லாம் கவிதை தோன்றுகிறதோ அப்போதே எழுதிவிடுங்கள்.

சுவடுகள்... said...

இது உண்மையான அனுபவமா சகோதரி...

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..