Monday, August 17, 2009

ஏக்கம்

அன்னை மடிதன்னில்....
அழகாய் நான் சாய்ந்திருக்க ....
அன்னையவள் என்கேசம் வருட....
அழகாய்...
ஆனந்தமாய்...
உறங்கினேன்....
விழிக்கவே கூடாதென ...
விழிகளை...
இறுக்க மூடினேன்...
தட்டி எழுப்பினாள் தோழி...
முட்டி வந்த கோபத்தை சட்டென்று கட்டுப்படுத்தி....
கட்டிலிலே எழுந்தமர்ந்தேன்...
என்ன கனவா? தோழியின் கேள்வி...
ம்... என் தலைமட்டும் அசைய மௌனமானேன்...
காலைக்கனவு கட்டாயம்...
பலிக்கும்...
உதட்டில் குறும்புடன் என்தோழி...
மூடநம்பிக்கையில் இருந்து அவள் முற்றுப் பெறவில்லை போலும்
உற்றுப்பார்த்தேன் சற்றே சிரித்தாள்...
என் இதுழோரமும் புன்னகை...
அது வெறுமையாய்....
நான் கனவில் கண்டது...
இறந்து போன...
என் அம்மாவை என்று....
பாவம்....
அவளுக்கெப்படித்தெரியும்....

7 comments:

chanthuru said...

தங்கள் கவிதைகள் மட்டும் நெஞ்சில் இடம்பிடிக்கவில்லை அதன் கனத்த நினைவுகள் நனைக்கவும் செய்கிறது என் இதயத்தை...!

elamthenral said...

மிக அருமையான கவிதை... வாழ்த்துக்கள்!

Anonymous said...

....thinking abt the dead is also a form of superstition.
you are filled with grievance dat makes u write poems... come out of it and be independent from all the predisposed thoughts... ur poems will be universal.
Anyway, I appreciate ur endeavor.

AK

சுவடுகள்... said...

நல்ல கவிதை ஆற்றல் தோழி. உங்கள் எண்ணம் உயர வாழ்த்துக்கள்....

சுவடுகள்... said...

ஆழ் மன எண்ணங்கள் அன்று கனவாக.... இன்று கவிதையாக.. மனதை உருக்கும் வரிகள் அக்கா...

பார்த்தி said...

அம்மா என்னும் தெய்வ‌ம்...
இத‌ய வ‌லிக‌ளைச் சும‌க்கும் க‌விதை...

பார்த்தி said...

அம்மா என்னும் தெய்வ‌ம்...
இத‌ய வ‌லிக‌ளைச் சும‌க்கும் க‌விதை...

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..